spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை"- திருச்சி சிவா பேட்டி!

“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!

-

- Advertisement -

 

"மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை"- திருச்சி சிவா பேட்டி!
File Photo

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 13) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

we-r-hiring

அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை!

அப்போது அவர் கூறியதாவது, “மணிப்பூர் பிரச்சனை பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை. ஆடைகளின்றி இரண்டு பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி உரிய விளக்கமளிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று வந்ததால் பிரச்சனை முடிந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

மணிப்பூரில் தற்போதும் வன்முறையில் உயிர்கள் பறிபோகின்றன. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலேயே அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தி.மு.க.வை குறி வைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் வெளியேறிய பிறகு மணிப்பூர் பற்றி இரண்டு நிமிடங்கள் பேசினார் பிரதமர். பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் குறிவைப்பது தி.மு.க. மீது மட்டும் தான்.

“1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மூலம் அங்குள்ள முதலமைச்சர் ரப்பர் ஸ்டாம்பை விட கீழே உள்ளார்.” இவ்வாறு திருச்சி சிவா கூறியுள்ளார்.

MUST READ