spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்'- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

-

- Advertisement -

 

we-r-hiring

 

மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையிலான மாநில அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது.

90வது பிறந்த நாள் – முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

அதேபோல், மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக சிவராஜ் சிங் பதவி வகித்து வரும் நிலையில், பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் அக்டோபர் மாதமே தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் 21 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் பா.ஜ.க. அறிவித்துள்ளது.

அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

MUST READ