
மதுரை மாவட்டம், வலையங்குளம் கருப்பசாமி கோயில் அருகே அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 51 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
அத்துடன், வெள்ளை புறாக்களையும் பறக்கவிட்டார். எடப்பாடி பழனிசாமி கொடியேற்றிய போது, ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்கள் தூவப்பட்டு, அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. மாநாட்டிற்காக, குவிந்துள்ள தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, 51 ஆண்டு கால வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மாநாட்டு திடலில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி அரங்கையும் பார்வையிட்டார்.
இன்று (ஆகஸ்ட் 20) மாலை 06.00 மணிக்கு நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரையாற்றுகிறார்.
நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!
மாநாட்டில் பங்கேற்றுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு சுமார் டன் கணக்கில் அரிசி, காய்கறிகளைக் கொண்டு விருந்து தயாராகி வருகிறது. மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வார்டு முதல் மாநில பொறுப்புகளை வகிக்கும் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!
அ.தி.மு.க.வின் மாநாடு காரணமாக, மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


