
ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் இருந்து ஆன்மீக பயணமாக வந்த ரயிலில் பயணித்த 9 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணிப்பவர்கள் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை அருகே ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பயணிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
“ரயில் தீ விபத்து நேர்ந்தது எப்படி?”- விரிவான தகவல்!
அதன்படி, 93605-52608, 80156-81915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


