spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

-

- Advertisement -

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை ஆதித்யா விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

சந்திரயான் – 3 வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சூரியனுக்கு அனுப்பவுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் நாளை காலை 11.50 மணிக்கு சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-L1 விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுப்பட உள்ளது.

we-r-hiring

இதற்கான கவுன்டவுன் நாளை காலை துவங்க உள்ளது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி இன்று மாலை முதல் நாளை வரை பழவேற்காடு மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

MUST READ