செங்கல்பட்டு: காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி
மதுராந்தகம் அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதல் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் சம்பவ இடத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து காரில் ஐந்து பேர் செய்யூர் பயணம் செய்தனர். இதேபோல் செய்யூரில் இருந்து உத்திரமேரூருக்கு தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்கள் ஏற்றி வந்த வேன் லட்சுமி நாராயணபுரம் என்ற இடத்தில் வந்த போது கார் மீது மோதியது. இதில் பயணம் செய்த ஐந்து பேரில் புருஷோத்தமன், சக்திவேல், குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த வெங்கட் மற்றும் ரகு இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வெங்கட் உயிரிழந்தார். படுகாயமடைந்த ரகு என்பவர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேனில் பயணம் செய்த 8 பேரில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை. காரில் சென்ற ஐந்து பேரும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.