
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்
நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக, பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் இது பற்றி மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி நாளான திங்கள்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதுப்பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..
மத்திய அமைச்சரவை ஒப்புதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே, இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.