

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இந்தாண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதில் காங்கிரஸ் கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லும் எனத் தெரிவித்த ராகுல் காந்தி எம்.பி., ராஜஸ்தானில் போட்டிகளுக்கு இடையில் தங்கள் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்திலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
9- ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. அநாகரிமாகப் பேசியது சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சனையில் இருந்து திசைத் திருப்பும் யுக்தி என்றும் ராகுல் காந்தி சாடினார். இதேபோல், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமும் மக்களை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைத் திருப்பும் முயற்சி என்றும் விமர்சித்தார். திசைத் திருப்பும் முயற்சிகளில் கவனம் செலுத்தாமல், இலக்கை நோக்கிச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது கர்நாடகா சட்டப்பேரவையில் தங்களுக்கு கிடைத்த பாடம் என்று ராகுல் காந்தி கூறினார்.
