
டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் ஊடக நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறையினர், சீல் வைக்கவுள்ளனர்.

வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!
சீனாவில் இருந்து முறைகேடாக நிதிப் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த டிஜிட்டல் மீடியா நிறுவனமான நியூஸ்கிளிக் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். சீனாவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அந்த நிறுவனம், பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகத்தில் இன்று (அக்.03) காலை காவல் துறையில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த உதவி ஆணையர் லலித் மோகன் தலைமையிலான காவலர்கள் சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், நியூஸ்கிளிக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30- க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!
இந்த சோதனையைத் தொடர்ந்து, நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல் வைத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


