
பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை மீண்டும் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் சந்தித்தார்.

வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!
கோவையில் மத்திய அரசு சார்பில், பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை இன்று (அக்.03) தொடக்கி வைத்தார். அப்போது, நிதியமைச்சரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமுல் ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, வரதராஜ் ஜெயராமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
சூப்பர் மார்கெட்டில் சிறுமி பலி! தெலங்கானாவில் நடந்த சோகம்
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அழைப்பின் பேரில், மூன்று எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது, மூன்று பேரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்.