spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை"எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு"

“எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு”

-

- Advertisement -

“எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு”

அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்  எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர் சங்கத்தினரும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மற்றும் ஆசிரியர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்கும் மேலாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

we-r-hiring

இதேபோல் 2013ம் ஆண்டு டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காத தேர்வர்கள், தங்களுக்கு அரசுபபணி வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் கடந்த 28ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு சங்கமான பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பணியாளர்களாக உறுதிசெய்யப்படாத தங்களுக்கு பணி வரன்முறை செய்யக்கோரியும், தங்களுக்கான அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி 11 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் பயிற்சியை புறக்கணிக்க உள்ளதாக அரிவித்துள்ளனர். 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவு 10.30 மணி அளவில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

MUST READ