spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி நேரம் நடை அடைப்பு!

சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி நேரம் நடை அடைப்பு!

-

- Advertisement -

 

we-r-hiring

சந்திர கிரகணம், வரும் அக்டோபர் 29- ஆம் தேதி அதிகாலை 01.05 மணி முதல் 02.22 மணி வரை நிகழவுள்ளதால், தமிழகத்தில் இன்று (அக்.28) மாலை முதல் பல்வேறு கோயில்களின் நடை அடைக்கப்படுகிறது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!

அதன்படி, திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் இன்று (அக்.28) மாலை 05.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், இன்று நள்ளிரவு 01.05 மணி முதல் 02.23 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இரவு 08.00 மணி முதல் நாளை (அக்.29) காலை 08.00 மணி வரை அடைக்கப்படும். புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று (அக்.28) 8 மணி நேரம் அடைக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (அக்.28) இரவு 07.00 மணி முதல் அதிகாலை 03.15 மணி வரை நடை அடைக்கப்படும். இதனால் திருப்பதி கோயிலில் பகல் 01.00 மணி வரை மட்டுமே இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!

பஞ்ச பூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் நடை சாத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி நவகிரக கவசம் அணிந்துள்ளதால் நடை சாத்தப்படாது, அதற்கு பதில் கிரகணகால அபிஷேகம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ