
சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் ஆம்வேக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு!
அதில், தனது உறுப்பினர்களிடம் ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி செய்துள்ளதாகவும், அந்த தொகையில் 70%-ஐ 2,589 கோடி ரூபாயை தனது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வங்கிக் கணக்குகளில் ஆம்வே பதுக்கி வைத்திருப்பதாகவும், அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பொருட்கள் விற்பனை அடிப்படையில் சட்டவிரோத பண சுழற்சித் திட்டங்களை ஆம்வே செயல்படுத்தி வந்தது. மிக அதிக லாபம் கிடைக்கும் என ஆசைக்காட்டி தனது உறுப்பினர்களிடம் ஆம்வே மோசடி செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
ஆம்வே நிறுவனம், தங்கள் பொருட்களை விற்பதை விட புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்ததாகவும் அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது. ஆம்வே நிறுவனம் மீது தெலங்கானா காவல்துறை பதிவுச் செய்துள்ள வழக்கின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு!
ஆம்வே நிறுவனத்தின் ரூபாய் 757 கோடி மதப்பிலான சொத்துகளை கடந்த ஆண்டு ஏப்ரலில் அமலாக்கத்துறை முடக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.