spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநவ.19-ல் உள்நாட்டில் 4.59 லட்சம் பேர் பறந்து சாதனை!

நவ.19-ல் உள்நாட்டில் 4.59 லட்சம் பேர் பறந்து சாதனை!

-

- Advertisement -

 

அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
Photo: Indigo Airlines

இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக, கடந்த நவம்பர் 19- ஆம் தேதி 4.59 லட்சத்தைத் தொட்டது. இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்வு!

கொரோனா காலத்திற்கு பின் இந்திய விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதிக விமான சேவைகள் சிறு நகரங்களுடன், விமான நிலையங்கள் இணைப்பு ஆகிய முற்போக்கு கொள்கைகளே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் தரம் அதிகரித்திருப்பதால் நாளுக்கு நாள் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த நவ.19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் உள்நாட்டு விமான சேவையின் எண்ணிக்கை 6,000-ஐ தொட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

“64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்குவதா?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி!

கடந்த ஆண்டின் நவம்பர் 19- ஆம் தேதி இது 5,500 ஆக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் 500 புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருப்பதாகவும், இதற்கு காரணமாக இருக்கும் விமான நிறுவனங்கள், விமான பயணிகளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ