spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!
Photo: AIADMK

டிசம்பர் 03- ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

we-r-hiring

விதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு…. குய்கோ ட்ரைலர் வெளியீடு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பூத் கமிட்டி பட்டியலை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 22 மாவட்டச் செயலாளர்கள் பட்டியலைச் சமர்ப்பிக்கவில்லை. வரும் டிசம்பர் 03- ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மையினர் மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளாரா மம்மூட்டி?…… காதல் தி கோர் படத்தை வெளியிட தடை!

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இரண்டாவது நாளாக இன்று (நவ.22) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!
Photo: AIADMK

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சட்டப்பேரவை மற்றும் பொதுக்கூட்டங்களில் அ.தி.மு.க.வைத் தரக்குறைவாகப் பேசிவிட்டு, தற்போது தி.மு.க. பாசாங்கு செய்து வருகிறது. மத்திய அரசாகவே இருந்தாலும், மக்கள் விரோத செயல்களை ஏற்க மாட்டோம். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. முடிந்த கதை தொடருவது இல்லை” என்றார்.

MUST READ