spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது!

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது!

-

- Advertisement -

 

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது!
File Photo

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கி 12 நாட்களாகத் தவிக்கும் 41 தொழிலாளர்கள் இன்று (நவ.23) காலை 08.30 மணியளவில் மீட்கப்படுவார்கள் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

we-r-hiring

கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாராவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட மண் சரிவையடுத்து, 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டனர். அதிநவீன இயந்திரங்கள் மற்றும் நிபுணர்களுடன் கடந்த 11 நாட்களாக தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தின் பக்கவாட்டில் துளையிட்டு, தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன, 57 மீட்டர் ஆழத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு குழித் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.

தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!

குழித் தோண்டும் ஆகர் இயந்திரமும் அடிக்கடி பழுதாவதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. மேலும், குழாய் செல்லும் வழியில் கான்கீரிட் கம்பிகள் இடையூறாக இருந்ததால், இதனை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கான்கீரிட் கம்பிகள் அகற்றப்பட்ட பின்பு தொழிலாளர்களை மீட்கும் இறுதிக்கட்ட பணிகள் முடியும் என மீட்புக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ