உலகநாயகன் கமல்ஹாசன், தற்போது தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் கல்கி 2898 AD படத்தில் வில்லனாகவும் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் KH233 வது படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து கடந்த 1987-ல் வெளியான நாயகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 35 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மேலும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தக் லைஃப் படத்தை தயாரிக்கிறது என்பதும் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் மற்றுமொரு புதிய அப்டேட் என்னவென்றால், கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த அபிராமி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை அபிராமி, 20 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அபிராமி சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ஆர் யூ ஓகே பேபி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.