spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமூளை அருகில் கட்டி.... அவதிப்படும் ஒரு வயது சிறுவன்..... உதவி கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் செய்தது?

மூளை அருகில் கட்டி…. அவதிப்படும் ஒரு வயது சிறுவன்….. உதவி கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் செய்தது?

-

- Advertisement -

ஜி.வி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரை துறையில் அறிமுகமானவர். இவர் பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதேசமயம் இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங், பென்சில், அடியே உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மேலும் டியர், ரிபெல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவ்வாறு ஒரு பக்கம் இசையமைப்பாளராகவும் மறுபக்கம் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகிறார்.

அந்த வகையில் மூளை அருகில் உண்டான கட்டியினால் அவதிப்படும் ஒரு வயது சிறுவனுக்கு  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளதாகவும்
ஜிவி பிரகாஷிடம், எக்ஸ் பக்கத்தின் வாயிலாக பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபர் பண உதவி கேட்டிருக்கிறார். அந்த நபருக்கு ஜிவி பிரகாஷ் உடனடியாக ஆன்லைன் மூலம் 75 ஆயிரம் ரூபாய் அனுப்பி பண உதவி செய்திருக்கிறார்.

we-r-hiring

இதனை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், “என்னால் முடிந்த சிறிய உதவி” என்று பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

MUST READ