- Advertisement -
அடுத்த ஒரு மாதம் டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் பண்ணுங்க’ – பிரதமர் மோடி அட்வைஸ்
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
107 ஆவது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது. சமீபத்தில் பண்டிகைகளின்போது சுமார் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் இடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது.

கையில் இருந்து பணம் கொடுக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு நீங்கள் டிஜிட்டல் மூலமாக மட்டுமே பணம் செலுத்துங்கள். ஒரு மாதத்திற்கு பிறகு உங்கள் அனுபவங்களையும், புகைப்படங்களையும் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என தனது X வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.