சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி ஆர் டி கன்வென்ஷன் சென்டரில் தொழில்நுட்பவியல் துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய வகையில் 25 லட்சம் இளைஞர்களை உருவாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 5ஜி சேவை கொண்டு வர ஜியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 40 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஜியோ நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 5ஜி அறிமுக சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு அன் லிமிடெட் டேட்டா இன்டர்நெட் சேவை 1GBPS வேகத்தில் எந்தவித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ட்ரூ 5ஜி சேவையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்,
5ஜி சேவை தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை மிக பெரிய வாய்ப்பு உள்ளது, தொழில்நுட்பம் வளர வளர இதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும், GDP உயரும்.
இந்த ஆண்டு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளோம்.
மேலும், இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளோம் என்றார்.
தமிழகத்தில் புதிய மென்பொருள் நிறுவனங்களை மூன்றாவது மற்றும் நான்காம் கட்ட நகரங்களுக்கு எடுத்து செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் நூறு பில்லியன் பொருளாதாரத்தை அடைய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்க கூடிய 25 லட்சம் இளைஞர்களை உருவாக்க வேண்டும் அதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
மக்கள் தங்களுக்கு தேவையான அரசின் அனைத்து விதமாக அடையாள அட்டைகளையும் இணையதளம் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு.
தற்போது 235 விதமான துறைகளில் முழுமையாக கணினி மூலம் மக்களுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும் அரசு அதிகாரிகள் துறை குறித்து பதிவேற்றம் செய்யவும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்தியா டிஜிட்டல் துறையில் தற்போது முன்னேறி வந்தாலும், தானியங்கி துறையில் பின் தங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
