சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சாஜித் அகமது வயது 27 என்ற மருத்துவருக்கும்(MBBS) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது நூறு சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை பெண் வீட்டார் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சில மாதங்களிலேயே இரண்டரை கோடி ரூபாய் வரதட்சணை கேட்டு தன்னுடைய மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும், போதைப் பொருட்களை உட்கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி மருத்துவர் சாஜித் அகமதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மனைவியின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மருத்துவர் சாஜித் அகமது.
இது குறித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் மருத்துவர் சாஜித்முகமதை தீவிரமாக தேடி வந்தனர்.
கல்பாக்கத்தில் பதுங்கி இருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்து ராயபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
