
பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலன் காக்கும் அரசு தி.மு.க. அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!
தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலன் காக்கும் அரசு தி.மு.க. அரசு. திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. பங்களா வாசலில் உள்ள பெரிய கதவுத் திறக்கும் வரை காத்திருக்கும் முந்தைய ஆட்சியின் நிலைமை இன்றில்லை.
டிவியில் பார்த்து தான் விவரம் தெரிந்து கொண்டேன் என்று கூறும் முந்தையை நிலை இன்றில்லை. மக்கள் பிரதிநிதிகளை அணுக முடியும், கேள்வி கேட்க முடியும் என்ற ஜனநாயகப் பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய குழுவின் பாராட்டு அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை.
மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!
முந்தைய ஆட்சியாளர்களால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் டிச.24- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


