
வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிச.19) தீர்ப்பு வழங்குகிறது.

நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!
கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியின் போது, அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர் மீதான குற்றச்ச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், விடுதலை செய்து, கடந்த 2016- ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதனை எதிர்த்து, 2017- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அப்போது, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன.
வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!
இவைகளில் உண்மைத்தன்மை இல்லை என்றும், மனைவியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிச.19) இறுதி தீர்ப்பை வழங்கவிருக்கிறார்.


