spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

கிறிஸ்துமஸ், விடுமுறை காலத்தையொட்டி, சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

we-r-hiring

வெள்ளப் பாதிப்பு… தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ரஜினி!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, தாம்பரம்- மங்களூரு, தாம்பரம்- கொல்லம் இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

டிசம்பர் 23, 30 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மங்களூருவுக்கு சிறப்பு விரைவு ரயில் (ரயில் எண் 06129) இயக்கப்படும். இந்த ரயில், இரவு 11.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில், டிசம்பர் 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மங்களூரு- தாம்பரம் ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், காலை 09.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…

டிசம்பர் 23, 30 ஆகிய தேதிகளில் தாம்பரம்- கொல்லம் விரைவு ரயில் (ரயில் எண் 06119) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், பகல் 01.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், டிசம்பர் 24, 31 ஆகிய தேதிகளில் கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ