spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கேப்டனின் உடலை வட்டமிட்ட கருடன்

கேப்டனின் உடலை வட்டமிட்ட கருடன்

-

- Advertisement -

கேப்டனின் உடலை வட்டமிட்ட கருடன்….பெருமாளின் ஆசியாக கருதிய கேப்டனின் குடும்பம் 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் அவரது உடலானது நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலம் சென்னை தீவு திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகம் வரை நடந்தது.

அப்போது அவரின் உடல் வைத்து எடுத்து செல்லப்பட்ட வாகனம் சென்னை சென்ட்ரலை கடந்து செல்லும் வழியில் வாகனத்தின் மேல் கருடன் வட்டமிட்டு சுற்றியது. இதனை பார்த்த பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினர் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கையெடுத்து கும்பிட்டனர்.

we-r-hiring

பெருமாளே வந்து ஆசியளித்து சொர்க்கத்திற்கு அழைப்பது போன்ற தருணம் அனைவரையும் நெகிழ செய்தது.  அதன் பின் அவரின் உடல் கட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

MUST READ