spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா!

-

- Advertisement -

 

ஏப்ரல் 29 ஆம் தேதி காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் மோடி

we-r-hiring

திருச்சிக்கு இன்று (ஜன.02) வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவில்லை. இதனால் உயர்கல்விப் படிப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக மாணாக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியான நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.02) பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கவிருக்கிறார். இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்!

இதை தவிர, பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். பிரதமரின் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ