spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாL1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா விண்கலம்!

L1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா விண்கலம்!

-

- Advertisement -

 

we-r-hiring

ஆதித்யா L1 விண்கலம் நாளை (ஜன.06) மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், நாளை மாலை விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். L1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!

சூரியனை ஆய்வுச் செய்ய செப்டம்பர் 02- ஆம் தேதி ஆதித்யா L1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தியது. ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் L1 புள்ளியை நோக்கிப் பயணித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா L1 ஆய்வு மேற்கொள்ளும்.

பார்த்திபன் இயக்கும் புதிய படம்…. மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!

ஆதித்யா L1 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த நாடே இந்த சரித்திர சாதனையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

MUST READ