spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"L1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தியது ஏன்?"- விரிவான தகவல்!

“L1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தியது ஏன்?”- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

"L1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தியது ஏன்?"- விரிவான தகவல்!

we-r-hiring

சூரியனை ஆய்வுச் செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக L1 புள்ளியைச் சென்றடைந்தது. விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ இன்று (ஜன.06) மாலை 05.00 மணிக்கு அறிவித்தது.

ரூ.16000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்குகிறது வின்பாஸ்ட் நிறுவனம் – முதலமைச்சர் அறிவிப்பு

கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி ஆதித்யா விண்கலம் 127 நாட்கள் பயணத்திற்கு பிறகு L1 புள்ளியை அடைந்தது. ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள L1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா விண்கலம் என்னென்ன ஆய்வுகளை செய்யும்?

சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆராய 7 வகையான கருவிகள் ஆதித்யா விண்கலத்தின் உள்ளன. சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 4 கருவிகள் நேரடியாகக் கண்காணிக்கும். ஆதித்யா விண்கலம் பயணிக்கும் போதே ஹெல்1ஓஎஸ், ஏபெக்ஸ், சூட் ஆகிய சாதனங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

இந்திய அறிவியலாளர்களின் சாதனை ஈடு இணையற்றது – ராமதாஸ் வாழ்த்து

சூரியனின் ஏற்படும் நிகழ்வுகளால் அதன் புறவெளியில் உருவாகும் மாற்றங்களை மீதமுள்ள கருவிகள் ஆராயும்.

L1 புள்ளியில் நிலைநிறுத்தியது ஏன்?

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக உள்ள L1 புள்ளியில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக உள்ளதால் எந்த விசையும் இல்லாமல் ஒரு பொருளை நிலைநிறுத்த முடியும். L1 புள்ளி அருகே சந்திரன், பிற கோள்களின் ஈர்ப்பு விசைகள் குறைந்த அளவிலே இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

MUST READ