Homeசெய்திகள்தமிழ்நாடுஊராட்சி மன்றத் தலைவரிடம் லஞ்சம் கேட்கும் உறுப்பினர்கள்.... வைரலாகும் ஆடியோ, வீடியோ!

ஊராட்சி மன்றத் தலைவரிடம் லஞ்சம் கேட்கும் உறுப்பினர்கள்…. வைரலாகும் ஆடியோ, வீடியோ!

-

- Advertisement -

 

ஊராட்சி மன்றத் தலைவரிடம் லஞ்சம் கேட்கும் உறுப்பினர்கள்.... வைரலாகும் ஆடியோ, வீடியோ!

we-r-hiring

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அத்திமலைபட்டு கிராமத்தில் சுமார் 3,000- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக சங்கர் என்பவரும், துணை தலைவராக ஆனந்தன் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். சுமார் 9 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர்.

இன்றும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

கடந்த 2022- ஆம் ஆண்டு பயனாளிகளிடம் வீடுக்கட்ட பணம் கேட்கும் வீடியோவை அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் சமூக வலைதளங்களில் வைரலாகியதால், மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து ஊராட்சி மன்றத் தலைவரின் செக் பவரை ரத்து செய்தது.

இதனையடுத்து, இது சம்மந்தமாக ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பின்னர் வழக்கு சம்மந்தமாக, அரசு அதிகாரிகள் வழக்கினை வாபஸ் பெற்றால் மீண்டும் தங்களுக்கு செக் பவர் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றும், ஆகையால் ஊராட்சி நிர்வாகத்தில்
உள்ள வார்டு உறுப்பினர்களின் ஆதரவு தர வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

இதனால் அனைத்து வார்டு உறுப்பினர்களிடம் ஆதரவு அளிக்க ஊராட்சி மன்ற
தலைவர் சங்கர் செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் செக் பவர் வருவதற்கு
ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டதற்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும்
வார்டு உறுப்பினர்களின் கணவர் ஆகியோர் தலா 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக
கொடுத்து விட்டு நிர்வாகத்தில் என்ன வேண்டுமானலும் செய்து கொள் என்று
கூறியதால் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் அதிர்ச்சியடைந்தார்.

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரம்… திமுக அரசு இரட்டை வேடம்- நாராயணன் திருப்பதி கண்டனம்

மேலும் தற்போது இச்சம்பவம் குறித்து ஆடியோ மற்றும் வார்டு உறுப்பினர்
பேசும் வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றன. இது
சம்மந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் சங்கரிடம் கேட்டதற்கு, ஒரு சிலரின்
தூண்டுதலால் என்னுடைய செக் பவரை பறிக்கபட்டன

ஆனால் தற்போது மீண்டும் செக் அளிக்க அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் எனக்கு
செக் பவர் வழங்க வார்டு உறுப்பினர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் கேட்டது
உண்மைதான் எனவும், 1 லட்சம் கொடுத்து விட்டு நிர்வாகத்தில் என்ன
வேண்டுமானாலும் செய்து கொள் என்று கூறினார்கள் இவ்வாறு அவர் பேசினார்.

கனமழை: சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து…. பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!

மேலும் தற்போது அத்திமலைபட்டு வார்டு கவுன்சிலர் சித்ரா என்பவரின் கணவர்
ஆனந்தன் என்பவர் அத்திமலைபட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேரம் பேசும்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அத்திமலைபட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு செக் பவர் சம்மந்தமாக வார்டு உறுப்பினர்கள் லஞ்சம் கேட்ட வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

MUST READ