spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சூரி..... 'கருடன்' பட ரிலீஸ் அப்டேட்!

ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சூரி….. ‘கருடன்’ பட ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சூரி..... கருடன் பட ரிலீஸ் அப்டேட்!நகைச்சுவை நடிகரான சூரி சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கார்த்தி, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதேசமயம் சமீப காலமாக நடிகர் சூரி கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ஏழு கடல் ஏழுமலை, கொட்டுக்காளி, விடுதலை இரண்டாம் பாகம் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சூரி நடிப்பில் கருடன் என்னும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் எந்த படத்தில் சூரியன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சூரி..... கருடன் பட ரிலீஸ் அப்டேட்! அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆக்சன் படமாக உருவாகி வரும் சூரியின் கருடன் திரைப்படமானது மார்ச் 29 இல் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.

MUST READ