spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!'

‘6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!’

-

- Advertisement -

 

'6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!'

we-r-hiring

தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜன.19) மாலை 06.00 மணிக்கு நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அனுராக் தாக்கூர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

சூரி – சசிகுமார் கூட்டணியில் கருடன்… வெளியானது முதல் தோற்றம்…

விழாவில், 6- வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார். விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “6- வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. இதற்கு முன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினோம். கேலோ இந்தியா போட்டிகள் மூலம் கனவு நனவாகியுள்ளது. செஸ் விளையாட்டில் தமிழ்நாடு வீரர்கள் சர்வதேச அளவில் முன்னிலையில் உள்ளனர்.

மோலிவுட் டூ கோலிவுட்… தமிழ் திரையில் அறிமுகமாகும் மெட்ராஸ்காரன்…

செஸ் விளையாட்டில் சாதித்த வைஷாலி, பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள். தமிழ்நாடு மிகப்பெரிய விளையாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தப்பட்டன”. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

MUST READ