
தைப்பூசத் திருவிழாவையொட்டி, வடலூரில் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் அமைந்துள்ளது வள்ளலாரின் சத்தியஞான சபை. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளில், சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். இதனைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தருவார்கள்.
அந்த வகையில், 135- வது ஆண்டாக வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 06.00 மணியளவில் வள்ளலார் அமைந்துள்ள சத்தியஞான சபையில் பல வண்ணங்களிலான ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று (ஜன.25) மட்டும் ஐந்து வேளைகளில் ஜோதி தரிசனம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தையொட்டி, வடலூர் முழுவதும் பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அமர்ந்து உணவருந்து வகையில், பல்வேறு அமைப்புகள் இணைந்து அன்னதானங்களை வழங்கி வருகின்றனர்.
வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ராமராஜன் பட நாயகி
இதனிடையே, தைப்பூசத் திருவிழாவையொட்டி, சத்தியஞான சபையில் ஜோதி தரிசனத்தைக் காண மாவட்ட காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.