spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?"

“பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?”

-

- Advertisement -

 

"பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?"

we-r-hiring

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஐக்கிய ஜனதா தளத்தில் 45 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வில் 78 எம்.எல்.ஏக்களும், ஹெச்.ஏ.எம். 4 எம்.எல்.ஏ.க்களும் என 127 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு நிதிஷ்குமாருக்கு கிடைக்கும்.

கடந்த முறை லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 79 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சியமைத்தார். நிதிஷ்குமாரை தவிர்த்து, லாலுவின் கட்சிக்கு 79 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள், இடதுசாரிகளுக்கு 16 எம்.எல்.ஏ.க்கள், மஜ்லிஸ் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ. என மொத்தம் 115 எம்.எல்.ஏ.க்கள் எதிர் தரப்புக்கு உள்ளனர்.

துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!

79 உறுப்பினர்கள் கொண்ட லாலு கட்சி ஆதரவை துறந்து 78 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பா.ஜ.க.வின் ஆதரவைப் பெறுகிறார் நிதிஷ்குமார்.

MUST READ