வரும் பிப்ரவரி 18- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் வருகிறார்.
சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா, வரும் பிப்ரவரி 18- ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை மாநாட்டை போல், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை பா.ஜ.க. செய்து வருகிறது.
‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பதாகவும், இதற்காக வரும் பிப்ரவரி 18- ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகைத் தரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் புஷ்பா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்த விழா பா.ஜ.க.வின் மாநாடாகவும், தேர்தல் பொதுக்கூட்டமாகவும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, நடப்பாண்டில் இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு வருகைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.