நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கேம் சேஞ்சர் படம் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ராம்சரண், புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
அடுத்ததாக ராம்சரண், புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் படமும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இப்படம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ரங்கஸ்தலம் என்ற வெற்றி
படத்தில் சுகுமார், ராம்சரண் கூட்டணி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.