
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (பிப்.05) கூட உள்ள நிலையில், முதலமைச்சர் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் எனக் கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், நில முறைகேடு வழக்கில், கடந்த ஜனவரி 31- ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக சாம்பாய் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், இரண்டு நாள் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், சம்பாய் சோரன் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் எனக் கூறப்படுகிறது. குதிரை பேரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக, ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (பிப்.04) ராஞ்சி திரும்பினர்.
மொத்தம் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைப் பெற 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை; தற்போதையை நிலவரப்படி, ஒரு தொகுதி காலியாக உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் 29 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸில் 16 சட்டமன்ற உறுப்பினர்களும் மார்க்சிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் தலா 1 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 47 பேர் உள்ளனர்.
சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளியை குணமாக்கும் நுணா இலை மூலிகை!
பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். முதலமைச்சர் சம்பாய் சோரனுக்கு 43 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இல்லை எனக் கூறப்படுகிறது.