spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகயல் ஆனந்தியின் 'மங்கை' பட ட்ரெய்லர் எப்படி இருக்கு?

கயல் ஆனந்தியின் ‘மங்கை’ பட ட்ரெய்லர் எப்படி இருக்கு?

-

- Advertisement -

ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த ஆனந்தி கடந்த 2014இல் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் அதே ஆண்டில் வெளியான கயல் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கயல் ஆனந்தியின் 'மங்கை' பட ட்ரெய்லர் எப்படி இருக்கு?அதை தொடர்ந்து கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்ட இவர் அதர்வாவிற்கு ஜோடியாக சண்டிவீரன் படத்திலும் விமலுக்கு ஜோடியாக மன்னர் வகையறா படத்திலும் நடித்திருந்தார். மேலும் விசாரணை, திரிஷா இல்லனா நயன்தாரா, ரூபாய், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் கயன் ஆனந்தி ஒயிட் ரோஸ் எனும் சைக்காலஜிக்கல் திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.
அதேசமயம் மங்கை எனும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்கிறார். இப்படத்தை எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க குபேந்திரன் காமாட்சி இயக்குகிறார். தீசன் என்பவர் படத்திற்கு இசை அமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டர், ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் செல்போனில் படம் பிடிக்கப்படுவது போன்று அமைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

we-r-hiring

இந்த ட்ரெய்லரின் மூலம் ஒரு பெண் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறாள்? எப்படி நடத்தப்படுகிறாள்? என்பது சம்பந்தமான கதை போல தெரிகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்ரெய்லரின் இறுதியில் இப்படம் மார்ச் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ