spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபஞ்சு மிட்டாயில் நஞ்சு......மக்களே உஷார்!

பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!

-

- Advertisement -

 

பஞ்சு மிட்டாயில் நஞ்சு......மக்களே உஷார்!

we-r-hiring

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் நஞ்சு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், சென்னை, புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் கங்குவா?

கண்களைக் கவர்ந்து நாவில் சுவை அரும்புகளை மலர வைக்கும் பஞ்சு மிட்டாயில் இப்படி ஒரு ஆபத்து மறைந்திருக்கும் என நாம் நினைத்திருக்கவே மாட்டோம். வண்ணத்திற்காக, பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் நிறமியை புற்றுநோய் உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களை உண்டாக்கும் நஞ்சு இருப்பது தெரிய வந்தது தான் அதிர்ச்சிக்கு காரணம்.

இது குறித்து வெளியான செய்தியைத் தொடர்ந்து, சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தளங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பஞ்சுமிட்டாய் மாதிரிகளையும் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர்.

அதில், புதுச்சேரி கடற்கரை, பூங்காக்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறுகின்றனர் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

தேசிய விருது பெற்ற தமிழ் படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை!

இதற்கிடையில், உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ