spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமார்ச் 13 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு!

மார்ச் 13 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு!

-

- Advertisement -

 

மார்ச் 13 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு!

விவசாயிகள் பேரணியைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் வரும் மார்ச் 13- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை நாளை (பிப்.13) நடத்தவுள்ள நிலையில், 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

‘யாருடன் கூட்டணி?’- சீட்டு கொடுத்து கருத்து கேட்ட ஜி.கே.வாசன்!

பயிர்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, டெல்லியில் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் கான்கிரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்டவற்றை டெல்லி காவல்துறை அமைத்துள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஆளுநர் வேண்டுமென்றே அவையின் மாண்பை சிதைத்துள்ளார்- செல்வப்பெருந்தகை

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், டெல்லியில் காவல்துறையினர் உச்சக்கட்டப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ