spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் பிரின்ஸ், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

ரசிகர்களின் பிரின்ஸ், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் 39 வது பிறந்தநாள் இன்று.

ரசிகர்களின் பிரின்ஸ், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல்!சிவகார்த்திகேயன் ஆரம்ப காலத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக வலம் வந்தவர். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். இவருடைய கலகலப்பான பேச்சு, நடனம், நகைச்சுவை என அனைத்தும் ரசிகர்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதன்படி மக்கள் மனதில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்து வெள்ளித்திரைக்கு பயணம் செய்தார். ரசிகர்களின் பிரின்ஸ், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல்!முதலில் 3 படத்தில் தனுஷின் நண்பராக நடித்தார். அதன் பின் மெரினா படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார். அதைத்தொடர்ந்து தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அனைத்தும் ஹிட் தான். இவருடைய படங்களில் நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக காக்கி சட்டை படத்திலும், பெண் வேடத்தில் ரெமோ படத்திலும் கலக்கியிருந்தார்.ரசிகர்களின் பிரின்ஸ், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல்! இருப்பினும் சீமராஜா ஹீரோ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை என்றாலும் தனது நடிப்பினாலும் திறமை நாளும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து நம்ம வீட்டுப் பிள்ளையாகவே மாறினார். அந்த அளவிற்கு இவருடைய படங்கள் குடும்பங்கள் ரசிக்கும் விதத்தில் அமையும். சிவகார்த்திகேயனின் டீசண்டான நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தூக்கிக் கொண்டாட வைத்தது. மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாற்றியது.ரசிகர்களின் பிரின்ஸ், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல்! அதை தொடர்ந்து மாவீரன் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று தந்தது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இதன் பிறகு சிவகார்த்திகேயன் தனது 21வது படத்திலும் தனது 23வது படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களை போல் காமெடி கலந்த கதை களத்தில் அல்லாமல் முழு நீள ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.ரசிகர்களின் பிரின்ஸ், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல்! எனவே இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனை வெற்றியின் வேறொரு பாதைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் பாடல் ஆசிரியராகவும் பாடகராகவும் நிரூபித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கஷ்டங்கள் நிறைந்த பாதைகளை கடந்து வந்து தனது கடின உழைப்பினால் ஒரு பிரின்ஸாகவும், நம்ம வீட்டு பிள்ளையாகவும் மக்கள் மனதில் குடியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ