பிரபல நடிகர் அர்ஜுன், தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ஜெய்ஹிந்த், வேதம் உள்ளிட்ட படங்களை தானே தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். மேலும் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து பிரேமா பரஹா என்ற கன்னட படத்தை இயக்கியிருந்தார். மீண்டும் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் அர்ஜுன். இந்த படம் தெலுங்கில் உருவாகி வரும் நிலையில் கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு அப்பாவாக நடித்து வருகிறார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.
மேலும் நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யா அர்ஜுன், கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தில் மூலம் தான் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.