
பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதிக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) மாலை உத்தரவுப் பிறப்பிக்கவுள்ளது. வரும் மார்ச் 18- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு பல்வேறு காரணங்களை முன்வைத்து கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆவடி அருகே பண மோசடி செய்த பெண் கைது!
பொதுத்தேர்வு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது; எந்த கட்சிக்கும் வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என்று கோவை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, கோவை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி ரமேஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
இந்த வழக்கை இன்று (மார்ச் 15) மாலை 04.30 மணிக்கு விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.


