spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவின் பயோபிக் படத்தில் வைரமுத்து?

இளையராஜாவின் பயோபிக் படத்தில் வைரமுத்து?

-

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். கனெக்ட் மீடியா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இளையராஜாவின் பயோபிக் படத்தில் வைரமுத்து?நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் போஸ்டரையும் படக் குழுவினர் வெளியிட்டிருந்தனர். அந்த போஸ்டரில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. அதேசமயம் இளையராஜாவின் பயோபிக் படத்தில் வைரமுத்து, ஏ ஆர் ரகுமான் ஆகிய இருவரின் கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஏனென்றால் இளையராஜாவை ஓரம் கட்டி ஆஸ்கர் விருதை வென்றவர் ஏ ஆர் ரகுமான் என்பதால் இந்த கேள்வி எழுந்துள்ளது. அதுபோல இளையராஜாவும் வைரமுத்துவும் ஏற்கனவே புன்னகை மன்னன், மண்வாசனை, முதல் மரியாதை போன்ற பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இளையராஜாவின் பயோபிக் படத்தில் வைரமுத்து?அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணத்தால் இருவரும் இணைந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை அப்படியே கலந்து கொண்டாலும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்ற மாட்டார்களா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் இளையராஜாவின் பயோபிக் படத்தில் வைரமுத்துவின் கதாபாத்திரம் இடம் பெறும் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வைரமுத்துவின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ