spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்!

பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்!

-

- Advertisement -

பிரதமர் மோடி தியானம் செய்வதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் முடிவில் பிரதமர் மோடி ஆன்மிக பயணங்களை மேற்கொள்வார் என கூறப்டுகிறது. இதனையொட்டி, மே 30-ம் தேதி கன்னியாகுமரி வந்து ஜூன் 1-ம் தேதி வரை தங்குகிறார். இவர் 2019 இல், அவர் கேதார்நாத்துக்குச் சென்றிருந்தார், 2014 இல் அவர் சிவாஜியின் பிரதாப்காட் சென்றிருந்தார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரிக்கு சென்று அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்யவுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 2024 மே 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (29.05.2024) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

MUST READ