spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் திரௌபதி முர்மூ - சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பு

கோவையில் திரௌபதி முர்மூ – சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பு

-

- Advertisement -

கோவையில் முதன் முறையாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மூ ஈஷா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கோவையை அருகே ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையிலே இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

we-r-hiring

இதையொட்டி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அங்கு உள்ள ஆதியோகி சிலை முன்பு மஹா சிவராத்திரி விழா உற்சாகமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, தியானங்கள், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரம்பரிய கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சி என விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையிலே கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை அழைப்பாளராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கின்றார். குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரையில் இருந்து தனி விமானம் மூலமாக சென்றார்.

கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது ஓய்விற்கு பின்னர் கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். இரவு மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை(ஞாயிறு) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

MUST READ