spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி

-

- Advertisement -

அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக முனைப்பு - சோனியா

நரேந்திர மோடி இன்று இரவு நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

we-r-hiring

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை பாஜகவுக்கு தன்ப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி

இந்த நிலையில், மோடி இன்று இரவு மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு மோடிக்கு, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கின்றார். இதனையடுத்து மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். பதவியேற்பு விழாவில் பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக இன்று பதவியேற்கவுள்ளது குறிப்பிடதக்கது.

 

MUST READ