Homeசெய்திகள்க்ரைம்கனியாமூர் பள்ளி மாணவி மரணம் - உயர் நீதிமன்றம் கேள்வி

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் – உயர் நீதிமன்றம் கேள்வி

-

- Advertisement -

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் - உயர் நீதிமன்றம் கேள்விகடந்த 2022ம் ஆண்டு மாணவி உயிரிழந்ததை அடுத்து பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனு அளிததுள்ளார்.

we-r-hiring

சம்பவம் தொடர்பாக  519 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் 166 பேரின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை அவ்வளவு பெரிய கூட்டம் எப்படி பள்ளி வளாகத்தில் கூடினர் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாட்சப் மூலமே கூட்டம் கூடியது.

திராவிட மணி என்பவரும், உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி தான் காரணம். அவர்களிடம் இதுவரை விசாரணை நடத்திவில்லை.  சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

மனுதாரர் இருவருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் குற்றவாளிகளாக சேர்ப்பீர்களா எனறனர். ஆதாரம் இருந்தால் இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள் என காவல்துறை தகவல் தொிவித்துள்ளது.

விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை ஜூலை 3 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

MUST READ