குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் 280 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் பல இடங்களில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு மற்றும் வினாத்தாள் போன்ற காரணங்களால் தாமதமாக தொடங்குவதாக புகார் எழுந்தது.


சென்னையில் சில தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் பதிவு எண்கள் மாறியுள்ளன. தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காலை 9:30 மணிக்கு தேர்வு தொடங்கி இருக்க வேண்டிய நிலையில் இன்னும் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள விளக்கத்தில், எங்கு புகார் என்பது குறித்து விரிவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த மையங்களில் தேர்வு தாமதமாக தொடங்குகிறதோ அந்த மையங்களில் எத்தனை நிமிடங்கள் தாமதமாக தொடங்குகின்றதோ அதற்கான கூடுதல் நேரம் வழங்குவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.


