spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிநாய்

8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிநாய்

-

- Advertisement -

8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிபிடித்த தெரு நாய் காயங்களோடு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் சிறுவன் சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி இவரது மகன் கௌரிநாத் 3ஆம் வகுப்பு பயின்று வருகிறான்.

8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிநாய்இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் தனது வீட்டருகே கடைக்கு சென்ற போது தெருவழியாக நடந்து வந்த நிலையில் தீடீரென தெருவில் இருந்த நாய் சிறுவனை எட்டி பிடித்து கடித்து குதறியுள்ளது.

we-r-hiring

இடது கை தோள் பட்டையில் நான்கு இடங்களில் ரத்தம் சொட்ட சொட்டகதறி அழுதபடி வந்த சிறுவனை அவனது தாயார் தனலட்சுமி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அங்கு சினுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவனை கடித்த அந்த வெறி பிடித்த நாய் அதே பகுதியில் அதே தினத்தில் மேலும் மூன்று பேரை கடித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு  ராயபுரம் பகுதியில் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் நடந்தேறிய நிலையில்அடுத்தடுத்து இது போன்று நாய் கடி சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே  பெரும் அச்சத்தை ஏற்படுத்ததுவதாக கூறப்படுகிறது.

MUST READ