spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்

மூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்

-

- Advertisement -

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில்,  மூன்று வகை போக்குவரத்தில்  பயணம் செய்யும் செயலியை உருவாக்க  Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு  சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.

மூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானதாகும். மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என மூன்றுக்கும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது.

we-r-hiring

இதனால் நேர விரயமும், அலைச்சலும், பயணத்தில் சிரமமும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தி, அனைத்து பொதுப் போக்குவரத்திலும் பயணிக்கலாம்.

இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் ஒரே ஸ்மார்ட் அட்டையைப் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

இந்நிலையில், இதற்கான செயலியை உருவாக்க  Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக டிசம்பர் மாதத்தில்  சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையிலும் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில்  இந்த திட்டம் செயல்படுத்தபடும் என  சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த கட்டமாக ஓலா, உபர், ஷேர் ஆட்டோக்கள் இதில் இணைக்கவும் திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

MUST READ